Home › தமிழ் › Tamil: PCOD meaning
Fertility journal · reviewed by a doctor
PCOD Meaning in Tamil: அறிகுறிகள், சிகிச்சை
PCOD (Polycystic Ovarian Disease) என்பது ovary-யில் பல சிறு follicle-கள் முதிர்ச்சி அடையாமல் தேங்கி, ovulation ஒழுங்கில்லாமல் போகும் ஒரு ஹார்மோன் நிலை. PCOS என்பதும் இதுவே. இது புற்றுநோயோ, அறுவை சிகிச்சை தேவைப்படும் கட்டியோ அல்ல. சென்னை ஜனனம் ஃபெர்ட்டிலிட்டி சென்டரில் சிகிச்சை வரிசைப்படி நடக்கிறது: எடை மற்றும் வாழ்க்கை முறை, ஸ்கேனுடன் ovulation மாத்திரை, ஊசி, தேவைப்பட்டால் மட்டுமே IVF.
Key takeaways
- PCOD, PCOS (2026 முதல் PMOS என்ற சர்வதேசப் பெயரும்) ஒரே நிலையைக் குறிக்கின்றன.
- ஸ்கேனில் தெரியும் “cyst” உண்மையான நீர்க்கட்டி அல்ல; வளர்ச்சி நின்றுவிட்ட follicle-கள், அறுவை சிகிச்சை தேவையில்லை.
- PCOS என்பது மலட்டுத்தன்மை அல்ல; சிகிச்சையின் இலக்கு ovulation-ஐ மீட்டுக்கொண்டுவருவது.
- “நீர்க்கட்டி கரைய” உணவோ பொடியோ இல்லை; எடை, தூக்கம், உடற்பயிற்சி ஹார்மோன் சமநிலையை மாற்றும்.
ஜனனத்தில் சிகிச்சை எந்த வரிசையில்?
முதலில் எடை, உணவு, தூக்கம், உடற்பயிற்சி. அடுத்து ஸ்கேன் கண்காணிப்புடன் ovulation மாத்திரை (letrozole போன்றவை). அவை பலன் தராவிட்டால் குறைந்த அளவு ஊசிகள், தேவைப்பட்டால் IUI. இவை எதுவும் வேலை செய்யாவிட்டால் மட்டுமே IVF. இதற்கு முன் கணவருக்கும் விந்து பரிசோதனை செய்கிறோம்.
When to call us
- மாதவிடாய் மூன்று மாதங்களுக்கு மேல் வரவில்லை, pregnancy test negative.
- PCOD இருப்பது தெரியும், குழந்தைக்கு முயற்சி செய்கிறீர்கள்.
- ovulation மாத்திரை ஸ்கேன் இல்லாமல் மாதக்கணக்கில் தொடர்கிறது.
- “ovary-ல் கட்டி, operation வேண்டும்” என்று சொன்னார்கள், இரண்டாவது கருத்து வேண்டும்.
- IVF ஊசிகளுக்குப் பிறகு கடுமையான வயிறு உப்புசம், மூச்சுத் திணறல், சிறுநீர் குறைவு: 108-ஐ அழைக்கவும், அல்லது அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும் (call 108 or go to the nearest emergency department). அதன் பிறகு எங்களை +91 89399 94244 என்ற எண்ணில் அழைக்கவும்.
PCOD இருந்தாலும் வழி இருக்கிறது.
உங்கள் scan report-ஐயும் கேள்வியையும் WhatsApp-ல் அனுப்புங்கள். இருவருக்கும் பரிசோதனை, பிறகு வரிசைப்படி சிகிச்சை.
